“என்னையே அடிச்சிட்டியா..?” காதலன் அறைந்த ஆத்திரம்.. கங்கை நதியில் குதித்த காதலி.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பதேனி படித்துறையில் (Bhadaeni Ghat), காதலர் அறைந்த ஆத்திரத்தில் இளம்பெண் ஒருவர் கங்கை நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் இந்த ஜோடி படித்துறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண், கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றில் குதித்துள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்குள்ள ஒருவரின் மொபைல் போனில் படமாக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் ஆற்றில் குதித்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் அலறினர். உடனே அங்கிருந்த படகோட்டிகள் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து, நீரில் மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண் மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டார்.

   

   

சம்பவத்திற்குப் பிறகு அந்த இளைஞரும் பெண்ணும் அவ்விடத்தை விட்டுச் சென்றதால், மோதலுக்கான சரியான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து இதுவரை காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் வாரணாசி படித்துறையில் சிறிது நேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.