
CINEMA
வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திராயன்-3…. அடுத்து என்ன நடக்க போகுது தெரியுமா?…
கடந்த 2019ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விக்ரம் லெண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஜூலை 4ம் தேதி இஸ்ரோவால் சந்திரயான் 3 விண்கலம் நிலவை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் இன்று சந்திரயான் – 3 லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை இந்தியா முழுவதும் உற்றுநோக்கி வந்தது.
லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிகள் மாலை 5.44 மணிக்கு தொடங்கிய நிலையில், முதற்கட்டமாக லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. அதன்பிறகு நிலவிற்கு மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. பின்னர் லேண்டர் நிலை மாற்றும் பணிகள் நடைபெற்றன. வெற்றிகரமாக செங்குத்தான நிலைக்கு மாற்றப்பட்டது.
இந்த திக் திக் நிமிடங்கள் அனைத்தையும் இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்த்து வந்தனர். ஒவ்வொரு கட்ட வெற்றியின்போது கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக நிலவின் தென் துருவ பகுதியில் லேண்டர் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்த முதல் நாடு என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.
தற்போது புழுதி அடங்குவதற்காக விக்ரம் லேண்டர் காத்திருக்கிறது. புழுதி அடங்கிய பின்னர் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டர் படம் எடுத்து பூமிக்கு அனுப்பும். இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். வெற்றிகரமாக தரையிறங்கியவுடன், லேண்டரின் மேடையில் இருந்து ரோவர் வெளிவரும். இது பக்கவாட்டு பேனல்களை வரிசைப்படுத்துவதற்கான சாய்வாகப் பயன்படுத்துகிறது.
ஒரு சந்திர நாளின் (தோராயமாக 14 பூமி நாட்கள்) பணி காலத்திற்கு வடிவமைக்கப்பட்ட ரோவர், பல்வேறு சோதனைகள் மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதன் மூலம் சந்திர சூழலின் ஆழமான ஆய்வில் ஈடுபடும். சந்திரயான்-3 இன் LM இன் நோக்கங்களில் மேற்பரப்புக்கு அருகிலுள்ள பிளாஸ்மா அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் அடர்த்தியை மதிப்பிடுவது, சந்திர மேற்பரப்பின் வெப்ப பண்பு அளவீடுகளை நடத்துவது மற்றும் நில அதிர்வு செயல்பாட்டை ஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும்.
மேம்பட்ட அறிவியல் பேலோடுகளுடன் பொருத்தப்பட்ட ரோவர், சந்திரனின் மேற்பரப்பின் இரசாயன மற்றும் கனிம கலவையை பகுப்பாய்வு செய்து, அதன் கலவை மற்றும் வரலாற்றில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும். ஒரு தனித்துவமான வளர்ச்சியில், சந்திரயான்-3 இன் எல்எம் சந்திரயான்-2 ஆர்பிட்டருடன் தொடர்பை ஏற்படுத்தும். இதன்மூலம் சந்திரன் பற்றிய இன்னும் பல சுவாரசியமான தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.