Connect with us

Tamizhanmedia.net

முதன்முறையாக வெளியுலகுக்கு தனது மனைவி மற்றும் மகள்களை அறிமுகப்படுத்திய நடிகர் கருணாகரன்… பலரும் பார்த்திடாத புகைப்படம்…

CINEMA

முதன்முறையாக வெளியுலகுக்கு தனது மனைவி மற்றும் மகள்களை அறிமுகப்படுத்திய நடிகர் கருணாகரன்… பலரும் பார்த்திடாத புகைப்படம்…

‘பீட்சா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் கருணாகரன். இதையடுத்து இவர் நடித்த சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற ‘காசு.. பணம்… துட்டு….மணி…மணி… ‘ என்ற பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அதன் பின்னர், “ஜிகர்தண்டா”, “லிங்கா”, “நேற்று இன்று நாளை”, “விவேகம்”, “இருமுகன்” என பல படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் கருணாகரன் விஜய்யை கலாய்த்தும், கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்ட ட்வீட்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் கருணாகரன்.

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் கருணாகரன் கடந்த 2013ஆம் ஆண்டு தென்றல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் கருணாகரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

More in CINEMA

To Top