Connect with us

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்.. “ஜோடி பொருத்தம் சூப்பர்”…

CINEMA

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்.. “ஜோடி பொருத்தம் சூப்பர்”…

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் கைதி மாஸ்டர் அந்தகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவரது குரலுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கைதி படத்தில் ‘இவங்க தலையை கொண்டு வர்றவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்’ என இவர் பேசும் ஒரு டயலாக் மிகவும் பிரபலம்.

   

இவர் திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு அவர் பல குறும்படங்களில் பணியாற்றினார். ரேடியோ ஒன் 94.3FM இல் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினார். 2012 இல், அவர் சுதந்திரத் திரைப்படமான பெருமான் மூலம் அறிமுகமானார். இது வெளிவந்த தமிழ் மொழி திரில்லர் திரைப்படம். இது அவரது அறிமுகப்படம் என்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு அர்ஜூன் தாஸை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஒரு ஸ்ரோங் டெபிட்டை கொடுத்திருந்தார்.

   

 

பின் 2015 ஆம் ஆண்டு குறும்படமான ரண்டெம் நம்பர்ஸ் என்ற படத்தில் நடித்து தன்னை வெளிப்படுத்தினார். இது ஒரு இளைஞர்களுக்கான படமாகும். இப்படத்தில் அவரது நடிப்பு அசத்தலாக இருந்திருக்கும். அதன் பின்னர் ஆக்சிஜன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தில் நடித்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்தார். . 2019 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ₹155 கோடிக்கு மேல் வசூலித்தது. இதைத்தொடர்ந்து தளபதிக்கு வில்லனாக 2021 மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.

இத்திரைப்படத்தை GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிக்க உள்ளார். அர்ஜுன் தாஷுக்கு ஜோடியாக பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்க உள்ளார்.   ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top