5 வயசுல அம்மா போலவே இருக்காங்களே… டாப் நடிகை அசின் மகளின் அழகிய புகைப்படங்கள்..!!

By Nanthini

Published on:

கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து சாதித்த நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவுக்கு அடுத்ததாக இருப்பவர் அசின்.

   

இவர் முதன்முதலாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் கேரளா பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமலஹாசன் உடன் தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 வருடங்கள், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

மலையாளம் அவரது தாய்மொழி என்றாலும் அதனையும் தாண்டி தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளையும் பேசக்கூடிய திறமை வல்லவர். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆல் இஸ் வெல் என்ற இந்தி திரைப்படம் தான்.

இவ்வாறு சினிமாவில் டாப் நடிகையாக இருந்த இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டே சினிமாவை விட்டு விலகினார்.

இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது . சமீபத்தில் நடிகை அசின் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அதிர்ச்சி அளிக்கும் செய்தி இணையத்தில் வெளியான நிலையில் அந்த தகவல் உண்மை இல்லை என்று அசின் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் 5 வயதாகும் அசின் மகளின் அழகிய புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini