சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த சொர்ணமா இது..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By admin on ஆடி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் துணை நடிகையாக வலம் வந்த பலர் இப்போது குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகி விட்டனர். 2005-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பி. வாசு இயக்கினார். நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

   

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் வடிவேலுவின் மனைவியாக நடிகை சொர்ணம் நடித்திருந்தார். சந்திரமுகி படத்தில் வடிவேலு, சொர்ணம் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த காட்சிகள் கலகலப்பாக இருக்கும். அந்த காட்சிகளை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

   

 

நடிகை சொர்ணம் தாய் மனசு படம் மூலம் நடிகையாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மாயா பஜார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைந்ததால் சொர்ணம் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் சொர்ணம் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த சொர்ணமா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.