ஆரம்ப காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி. இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷ்ணி வெளியேறியதால் அவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.
இந்த சீரியல் மூலம் வினுஷா தேவிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் வினுஷா தேவி நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு இரண்டாவது சீசன் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக வினுஷா தேவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். பிக் பாஸ் வீட்டில் பொதுவாகவே கலவரங்கள் அதிகமாக இருக்கும். அப்படி இருக்க வினுஷா தேவி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் 28 வது நாளில் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வினுஷா தேவி கலந்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை சீரியல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் பனி விழும் மலர்வனம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வினுஷா தேவி ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஒரு சில படங்களிலும் வினுஷா தேவி நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வினுஷா தேவி அவ்வ போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் மார்டன் உடையில் வினுஷா தேவி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

#image_title