#image_title
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி முன்னேறி வந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் படம் என்றாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் எம் ஜி ஆர். தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இவர் ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல உதவும் மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல். இது மட்டுமில்லாமல் ஷூட்டிங்கில் மிகவும் ஜாலியாக இருப்பாராம் எம் ஜி ஆர். அது பற்றி ஒரு சம்பவம் இருக்கிறது.
புதுமைப்பித்தன் படத்தில் நடித்து கொண்டிருந்த எம்ஜிஆர் வாகினி ஸ்டுடியோவில் ஒரு காட்சிக்காக பெண் வேடம் அணிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்திரபாபு பெண் வேடத்திலிருந்த எம்ஜிஆரை பார்த்து வியந்து டார்லிங் பேபி செல்லம் என்று கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். அதை வைத்து கலாட்டா செய்யவும் ஆரம்பித்திருக்கிறார். அவருடன் ஈடு கொடுத்து ஜாலியாக பெண் குரலில் பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். இதை பார்த்த டைரக்டர் நான் சீன் எடுக்க வேண்டும் தயவு செய்து இருவரும் கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று கெஞ்சி கேட்டாராம். அவ்வளவு ஜாலியாக இருப்பாராம் எம்ஜிஆர்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…
அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…
கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…
பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…