தென்னிந்திய திரை உலகில் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உள்ளவர் தான் ஜோசுவா ஸ்ரீதர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மூலமாக தான் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை இசையமைப்பாளராக பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் இசையமைத்த பாடல் கூட என்ன என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சினிமாவில் சத்தம் இல்லாமல் சாதனை படைத்த மனிதர். 19 வயதிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட இவர் 20 வயதில் ஒரு குழந்தைக்கு அப்பாவானார்.
திருமணத்திற்குப் பிறகு 1993 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இவர் அதுவரை ஸ்ரீதர் ஆக இருந்தவர் ஜோஸ்வா ஸ்ரீதர் ஆக மாறினார். 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திலிருந்து வெளியேறி இந்துவாக வாழ்ந்து வருகின்றார். பின்னர் பார்த்தாலே பரவசம், Lagaan, காதல் வைரஸ் மற்றும் பாய்ஸ் என தொடர்ந்து மூன்று வகை ஆண்டுகள் ரகுமானின் 15 படங்களில் பல பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கீபோர்டு வாசித்தார். அதே சமயத்தில் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா உள்ளிட்ட இசை அமைப்பாளர்களோடு இணைந்தார். பிறகு தான் காதல் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
காதல் படத்தில் இடம் பெற்ற, தொட்டு தொட்டு உன்னை, உனக்கென இருப்பேன் , அவன் பார்த்ததுமே நான் பூத்து விட்டேன் ஆகிய பாடல்கள் அனைத்தும் இவருடைய இசையில் உருவானது தான். இது இதுவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனைப் போலவே மாணவர்களின் கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான கல்லூரி திரைப்படத்தில் இடம்பெற்ற “சரியா இது தவறா” என்ற பாடலுக்கும் இவர்தான் இசையமைத்திருந்தார்.
இந்தப் பாடல் இன்றும் பலருடைய ஃபேவரைட் பாடலாக உள்ளது. அதனைப் போலவே நானி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான வெப்பம் திரைப்படத்தில் இடம் பெற்ற “மழை வரும் மழைத்துளி”என்ற பாடலுக்கும் ஜோஸ்வா தான் இசையமைத்திருந்தார். மேலும் ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “மழை பொழிந்திடும் நேரம் மனதில் ஓர் ஈரம்”என்ற பாடலுக்கும் இவர்தான் இசையமைத்திருந்தார். இப்படி சினிமாவில் சத்தம் இல்லாமல் சாதனை படைத்த இவர் பற்றி இன்றும் பலருக்கும் தெரியவில்லை. இவர் எங்கே என்று தேடும் அளவிற்கு காணாமல் போய்விட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…