சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒருவராக இருப்பவர்தான் விஜே பார்வதி. சென்னையில் டிகிரி முடித்த இவர் மதுரைக்கு போய் பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்தார். அதன் பிறகு சென்னைக்கு வந்து சில பத்திரிகைகளில் வேலை செய்தார். பிறகு ஊடகத்தில் நுழைந்த இவர் யூடியூப் சேனல்களில் வேலை செய்தார். அப்போது இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பார்வதியை மேலும் பிரபலப்படுத்தியது. காபி வித் டிடி போல இவரும் பிரபலங்களிடம் பேட்டி எடுத்தார். அது தொடர்பான வீடியோக்களும் ரசிகர்களிடம் வைரலானது. நடிகர் அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
ஆனால் சரியாக விளையாடாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவ்வாறு அடிக்கடி நடிகைகள் போல ஆடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் நெட்டிசன்களை சேர்த்துக் கொண்டு பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இந்த நிலையில் உன் இஷ்டத்துக்கு டிரஸ் போடுற உனக்கெல்லாம் வெக்கமாவே இல்லையா என்று கமெண்டில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பார்வதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரொம்ப மோசமான டிரஸ் போடுற உனக்கு வெட்கமாகவே இல்லையா என்று கேட்கிறீர்கள்.
ஆமா எனக்கு வெக்கமாவே இல்ல தான். இது என்னோட உடம்பு என்ன டிரஸ் போடணும்னு என்னோட விருப்பம் தான். ஒரு அழகான பெண்ணின் உடம்பை நீங்க எப்படி தவறா பார்ப்பீங்க. கோவில்களில் இருக்கும் பெரும்பாலான சிற்பங்கள் மார்பகம் தெரியும் படி தான் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மட்டும் நீங்கள் தெய்வீகமாக கொண்டாடும்போது பெண்கள் மாடர்ன் ஆடை அணிந்தால் அதனை தவறாக பேசுவீங்களா. ஒரு பொண்ணோட ஆடையை வைத்து அவங்களோட கேரக்டர் இது தானு நீங்க கெஸ் பண்ணாதீங்க. ஆம்பளைங்க லுங்கி மற்றும் பட்டாபட்டி அணிந்து கொண்டு ரோட்ல நடந்தா அவங்க ஆம்பள விபச்சாரி என்று நாங்க சொல்லிட முடியுமா என்று பார்வதி வீடியோ வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…