Categories: சினிமா

அமரன் வெற்றிக்குப் பிறகு பல மடங்கு உயர்ந்த சிவகார்த்திகேயன் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..?

Spread the love

விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். சின்னத்திரை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து பிறகு வெள்ளி திரையில் இன்று கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நட்சத்திரம் தான் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்புக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமை. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அமரன். மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமரன் திரைப்படம் உலக அளவில் வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டு இருந்தார். இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது. சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படம் இதுவரை உலக அளவில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி இனி கண்டிப்பாக சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்று ரசிகர்கள் அடித்து கூறுகிறார்கள். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் சம்பளம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி உள்ள நிலையில் கிட்டத்தட்ட 50 கோடி ஷேர் போகும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் சிவக்கார்த்திகேயனுக்கு இந்த படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் பல மடங்கு அப்படியே உயர்ந்துள்ளது.

அமரன் திரைப்படத்தை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதனை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள நிலையில் அந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளம் 55 கோடி வரை பேசப்பட்டுள்ளது. அதே சமயம் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு மிகப் பெரிய வெற்றியை கண்ட சிவகார்த்திகேயனின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago