மருமகளுக்கு எதிராக களமிறங்கும் மாமனார்… ராமதாஸின் 2 நாள் மாஸ்டர் பிளான்.. அன்புமணியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியா…?

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தருமபுரி தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொள்ள உள்ள தேர்தல் பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் பாமகவின் அன்புமணி தரப்பை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில் 38 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இது குறிப்பாக, தருமபுரி தொகுதியில் போட்டியிடும் செளமியா அன்புமணியை எதிர்த்து, ராமதாஸ் தரப்பு வேட்பாளரான முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் சரவணனை ஆதரித்து ராமதாஸ் இரண்டு நாட்கள் தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த செளமியா அன்புமணியை வீழ்த்துவதே ராமதாஸ் தரப்பின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

   

இதனால் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெறும் இந்தப் பிரச்சாரப் பயணத்தில், ஜெயங்கொண்டம், கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ராமதாஸ் உரையாற்றுகிறார். தருமபுரியில் நிலவும் அரசியல் சூழலில், 45 வயதிற்கு மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்றும் ராமதாஸ் பக்கமே சார்ந்து இருப்பதால், அவரது வருகை செளமியா அன்புமணியின் வெற்றி வாய்ப்புக்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.