தனிக்கட்சி தொடங்கும் கனிமொழி..? அண்ணாமலை போட்ட குண்டு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தால், கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் முதலமைச்சர் ஸ்டாலினும், மறுபுறம் கனிமொழியும் நேரடியாக அரசியல் களத்தில் மோதினால், திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது என அவர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, மாநில அரசியலில் தடம் பதிக்க விரும்பி கனிமொழி தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாகவும், ஆனால் அதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையின் இந்த அதிரடியான கருத்துக்கள் தற்போது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.