சொந்த பிசினஸ் செய்யும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் மத்திய அரசு… எப்படி விண்ணப்பிப்பது..?

By Nanthini on ஆனி 30, 2025

Spread the love

இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்று அனைத்து துறைகளிலும் பெண்களின் ஆதிக்கம் என்பது அதிகமாகவே உள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க தொடங்கிவிட்டன. அதே சமயம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்களும் சொந்த தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுவதால் பெண்கள் பலர் சொந்தத் தொழில் செய்து வருமானமீட்டி குடும்பத்தை கவனித்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டம் பெண் தொழில் முனைவோருக்கு 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன்களை வழங்குகிறது. விண்ணப்பதாரர்கள் எஸ்சி எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு புதிய பிசினஸ் பிளான் உடன் இந்த கடன் திட்டத்திற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கான குறைந்தபட்ச திருப்பி செலுத்தும் காலம் 7 ஆண்டுகளாகும். இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://www.startupindia.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்