தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை தினங்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடப்பட்டிருந்தது. இருந்தாலும் பல தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த விடுமுறை தின பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திற்கும் முன்பாகவே ரேஷன் கடைகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறையாகும். வழக்கம்போல முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் (ஜூலை 4, 11) விடுமுறை. அதேபோல கடைசி 2 ஞாயிற்றுக்கிழமைகள் (ஜூலை 20, 27) ரேஷன் கடைகள் செயல்படாது. மேலும் ஜூலை 6ஆம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினமும் விடுமுறை தான். எனவே இதற்கு ஏற்றது போல முன்னதாகவே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்வது நல்லது.
