பசங்க பட ஜீவாவா இது?.. இவருக்கு திருமணமா?.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Nanthini on ஆனி 30, 2025

Spread the love

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் ஸ்ரீராம். அதில் நடித்த ஜீவாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் ஸ்ரீராம் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்று தந்தது.

 இவர் தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியா என்பவரை மணமுடித்துள்ளார். பயோடெக் கம்பெனி ஒன்றின் உரிமையாளராக இருக்கிறார் ஸ்ரீராம். அதன் மூலம் ஸ்ரீராம் - நிகில் பிரியா இடையே காதல் மலர்ந்துள்ளது.

   

மேலும் இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த படம் மூலம் பசங்க பட ஜீவா என்றே பெரும்பாலும் இவர் அறியப்பட்டார். அடுத்து தமிழ் படம், தீராத விளையாட்டுப் பிள்ளை, வேங்கை மற்றும் ஜில்லா ஆகிய படங்களில் நடித்த இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு எதுவும் கிடைக்காத நிலையில் 2014 ஆம் ஆண்டு கோலிசோடா திரைப்படத்தில் நடித்த பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அடுத்து பாபநாசம், அடுத்த சாட்டை மற்றும் ஸ்ட்ரீட் லைட் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்தார். இறுதியாக 2020 ஆம் ஆண்டு இவர் நடித்த படம் வெளியானது. நவரசா, ஸ்பை, சிக்ஸ், செவன் மற்றும் எயிட் வெப் சீரிஸ்களில் நடித்திருந்தார்.

   

 ஸ்ரீராம் - நிகிலா திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

இப்படியான நிலையில் நடிகர் ஸ்ரீராமுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது நீண்ட நாள் காதலி ஆன நிகில் பிரியா என்பவரை மணம் முடித்துள்ளார். பயோடெக் கம்பெனி ஒன்றின் உரிமையாளராக ஸ்ரீராம் தற்போது உள்ளார். அதன் மூலம் ஸ்ரீராம் மற்றும் நிகில் பிரியா இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர்களுடைய திருமண புகைப்படம் தற்போது வைரலாகி வர பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.