பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புடன் மாதம் ரூ 7000 உதவி தொகை… மத்திய அரசின் இந்த சூப்பர் திட்டத்தில் சேருங்க…

By admin on தை 11, 2025

Spread the love

மத்திய அரசு மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. முதலீடு, சேமிப்பு, சுய வேலைவாய்ப்பு, மானிய வட்டியுடன் கடன் என பல திட்டங்களை கொண்டு இருக்கிறது. அதில் பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் விதமாகவும் பயிற்சியோடு சேர்த்து ஊக்க தொகையும் வழங்கும் ஒரு திட்டத்தை பற்றி இனி காண்போம்.

   

நரேந்திர மோடி பெண்களின் நலனுக்காக எல்ஐசியின் பீமா சகித் திட்டத்தை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி வைத்தார். இது தொடங்கிய ஒரு மாதத்திற்குள் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் 50,000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்து இருக்கின்றார்கள். எல் ஐ சி யின் பீமா சகித் திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையிலான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு சுயசார்பு மற்றும் அதிகாரம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

   

இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு எல் ஐ சி முகவர்களாக மாற சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற பீமா சகி பெண்களுக்கு எல்ஐசியில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு சம்பளம் அல்லது உதவி தொகை, பயிற்சி முடித்த பிறகு பெண்கள் lic முகவர்களாக பணியாற்றலாம். அதற்குப் பிறகு இவர்கள் எல்ஐசி மேம்பாட்டு அதிகாரியாகவும் பணியை பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

 

இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு பீமா சகிக்கான மொத்த பதிவு எண்ணிக்கை 52,516 இருக்கிறது. மேலும் 14,583 பீமா சகிகள் பாலிசிகளை விற்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த எல்ஐசியின் பீமா சகி யோஜனாவின் கீழ் பெண்களுக்கு முதல் ஆண்டில் மாதத்திற்கு ரூபாய் 7000 உதவி தொகையும், இரண்டாம் ஆண்டில் மாதத்திற்கு ரூபாய் 6000 உதவி தொகையும், மூன்றாம் ஆண்டில் மாதத்திற்கு ரூபாய் 5000 உதவி தொகையும் வழங்கப்படும்.

இந்த ஊக்கத்தொகைகளை தவிர பெண் முகவர்கள் தாங்கள் காப்பீட்டு கொள்கை விற்பனையின் அடிப்படையில் கமிஷனை பெறலாம். இந்த பீமா சகி யோஜனா திட்டத்தில் சேர விரும்பும் பெண்கள் மத்திய அரசின் இணையதளத்தில் சென்று பார்வையிடலாம். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ், முகவரி சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.