51 வயதில் செம ஜாலியாக… இளம் காதலியுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஹிர்திக் ரோஷன்..!

By Soundarya on தை 11, 2025

Spread the love

ரித்திக் ரோஷன் நடனத்திற்கு என்று பெயர் போன பிரபலம் . பாலிவுட் சினிமாவில் அவருடைய நடனம் போல ஆட வேண்டும் என்று பலரும் முயற்சி செய்கிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய நடனத்தின் மூலம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார்.

   

இதற்கிடையில் கடந்த 2000 ஆம் வருடம்  சுசானே கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

   

 

பாலிவுட்டின் பிரபல ஜோடிகளாக வளம் வந்த இவர்கள் 2014 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

அவர்களுடைய விவகாரத்து செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில்  நடிகர் ஹிருத்திக் ரோஷன் தற்போது 51வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

புது வருட பிறப்பன்று  தன்னுடைய முன்னாள் மனைவியுடனும் மகனுடனும் கொண்டாடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனை தொடர்ந்து தான் காதலித்து வரும் 39 வயதான சபா அசாத் என்பவரோடு தன்னுடைய  பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ 51 வயசுல மனுஷன் ஜாலி பண்ணுறாரே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.