நாம் எப்போதும் வீட்டில் ஒரு குணத்தையும் வெளியில் ஒரு குணத்தையும் காண்பித்துக் கொண்டு இருப்போம். இது பொதுவான ஒன்றுதான். வீட்டில் கொஞ்சம் ஓப்பனாக இருப்போம் வெளியில் சற்று கட்டுக்கோப்பாக இருப்போம். ஆனால் ஒரு சிலர் பொதுவெளியில் செய்யக்கூடாத விஷயங்களை தெரியாமலோ தவறுதலோ செய்து விடுவார்கள். அப்படி பொதுவெளியில் செய்யக்கூடாத ஒரு சில விஷயங்களைப் பற்றி இனி காண்போம்.
முதலில் பொது இடத்தில் தனிப்பட்ட உடல்நல பிரச்சனைகள், மதம், அரசியல் போன்றவற்றை பேசக்கூடாது. மற்றவர்களை பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ரகசியங்கள் வதந்திகள் அல்லது மற்றவர்களை புண்படுத்தும் செயல்களை செய்யக்கூடாது. நம்முடைய உடல்நிலை பிரச்சினைகளை பொது வெளியிலோ அல்லது கூட்டமான இடத்திலோ பேசக்கூடாது.
அடுத்ததாக பொது இடத்தில் வருமானம், வரவு, செலவு, சொந்த பிரச்சனைகளை பற்றி பகிர்ந்து பேசக்கூடாது. அடுத்ததாக உணவு மற்றும் உடற்பயிற்சியை பற்றி பொதுவெளியியல் பேசக்கூடாது. நீங்கள் சாப்பிடும் உணவுகள் மற்றவர்களின் உணவு பழக்கத்தை பாதிக்கக்கூடும்.
பொது இடங்களில் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பொது இடத்தில் இருமல் அல்லது வாயை மூடாமல் தும்முதல் எச்சில் துப்புதல் போன்றவற்றை செய்யக்கூடாது. பொது வெளியில் தொலைபேசியில் பேசும்போது மிகவும் சத்தம் போட்டு உரக்க பேச கூடாது. அதேபோல் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதோ குப்பையை கொட்டுவதோ செய்யக்கூடாது. இது போன்ற விஷயங்களை நீங்கள் பொதுவெளியில் செய்யாமல் இருப்பது நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.