காலையிலேயே ஓபிஎஸ்-க்கு பயங்கர ஷாக்… பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 29, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதனிடையே மாற்றுக் கட்சியினர் பலரும் கட்சித் தாவி அவரவர் விரும்பும் கட்சிகளில் இணைந்து வருகின்றன. இப்படியான நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் கிருத்திகா நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு ஓபிஎஸ் தனது அரசியல் முடிவு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அவரது செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக சர்ச்சை வடித்துள்ளது. இப்படியான நிலையில் அவரது அணியை சேர்ந்த பலரும் அதிமுக, திமுக மற்றும் பாஜக என பல கட்சிகளில் இணைந்து வருவது ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.