ChatGPT Go…! ப்ரீமியம் சேவை முற்றிலும் இலவசம்…. ஓபன் ஏஐ சூப்பர் அறிவிப்பு…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2025

Spread the love

ஓபன் ஏஐ இந்திய பயனர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி மேம்பட்ட பிரிமியம் சந்தா திட்டமான Chat GPT Go-வை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். நவம்பர் 4- ஆம் தேதி முதல் தொடங்கும் சிறப்பு விளம்பர காலத்தில் பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். Chat GPT Go என்பது சமீபத்தில் ஓபன் ஏஐ-ஆல் தொடங்கப்பட்ட பிரீமியம் சந்தா திட்டம்.

இதன்மூலம் ChatGPT-5 மாடலின் அடிப்படையில் பயனர்கள் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். அதிக செய்தி அனுப்பும் வரம்பு, சிறந்த பட உருவாக்கம் அதிக கோப்புகள் மற்றும் படங்களை பதிவேற்றும் வசதி, உரையாடல்களை நீண்ட நேரம் சாட் பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் இதில் அடங்கும். ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இந்த சந்தா திட்டம் முதன் முறையாக தொடங்கப் பட்ட நிலையில் நவம்பர் நான்காம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.