“என்னை விட்டுடுங்க”…. கைகால்களை கட்டிப்போட்டு கதற கதற மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கொடூரம்… சிபிசிஐடி கைப்பற்றிய பகீர் ஆதாரங்கள்…. திடுக்கிடும் உண்மை…!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் அடுத்துள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35). தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்த இவர், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக தென் தாமரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை 13 அன்று அவர் சிறைக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சபரி வர்மன் சிறைக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்த நேசமணி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவக்குமார் ஆகிய 3 சிறை ஊழியர்கள் மற்றும் விஷ்ணு, சாரதி உள்ளிட்ட 8 விசாரணை கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான காவல்துறை சிறை வளாகம் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில், சம்பவத்தன்று இரவு சபரி வர்மன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் எனக் கூறி சத்தமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறை வார்டன்கள், சமையல் வேலையை முடித்துவிட்டு வந்த கைதிகளைத் தூண்டிவிட்டு சபரி வர்மனைத் தாக்கச் செய்துள்ளனர். கைதிகள் அவரது லுங்கியை உருவி கைகால்களைக் கட்டி கொடூரமாகத் தாக்கியதில் சபரி வர்மன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறைக் காவலர்கள் நாங்குநேரி கிளைச் சிறையிலும், ஏனைய 8 கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்புடைய 11 பேரையும் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி ஒருவர் சிறை வளாகத்திலேயே அதிகாரிகளின் தூண்டுதலால் அடித்துக் கொல்லப்பட்ட இந்த விவகாரம், சிறைத்துறையின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

3 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

3 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

3 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago