“தெரிஞ்சிருந்தா நானே திறந்திருப்பேனே…” பெயிண்ட் டப்பாவுக்குள் ரொக்க பரிசு… மூடியைத் திறந்த பெயிண்டருக்குக் காத்திருந்த ஜாக்பாட்… தொழிலாளி பகிர்ந்த சுவாரசியமான உண்மை…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

அண்மையில் ஒருவரது வீட்டில் சாயம் பூசும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, புதிதாக வாங்கி வரப்பட்ட பெயிண்ட் பக்கெட்டுகளை தொழிலாளியிடம் வழங்கியுள்ளனர். அவர் முதல் பெயிண்ட் டப்பாவின் மூடியைத் திறந்த உடனேயே, அதற்குள்ளிருந்து எதிர்பாராதவிதமாக ரூ.400 மதிப்புள்ள பரிசுத் டோக்கன் ஒன்று வெளியே விழுந்துள்ளது. இதைக் கண்டு வீட்டின் உரிமையாளர் ஆச்சரியமடைந்து, பெயிண்ட் டப்பாக்களுக்குள் உண்மையில் பணம் இருக்குமா என அவரிடம் வினவியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த தொழிலாளி, சில பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்கும் விளம்பர உத்தியாக ரூ. 50 முதல் ரூ.400 மற்றும் அதற்கு மேலான மதிப்புடைய ரொக்கப் பரிசுத் டோக்கன்களைப் பெட்டிகளுக்குள் வைப்பது வழக்கம் என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் கேட்ட உரிமையாளர், இது முன்பே தெரிந்திருந்தால் அனைத்து டப்பாக்களையும் தானே முதலில் திறந்து பார்த்திருப்பேன் எனச் சிரித்தபடி கூறியுள்ளார். இது அனைத்து பக்கெட்டுகளிலும் கிடைக்காது என்றாலும், எதிர்பாராமல் கிடைக்கும் இதுபோன்ற ரொக்கப் பரிசுகள் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைகின்றன.