“அப்பா கூட வந்துரு மா..” வாசலில் நின்று கைகூப்பி கும்பிட்டு கெஞ்சிய தந்தை…. மனம் இறங்காத மகள்… பெற்ற பிள்ளையின் செயலால் நிலைகுலைந்து போன பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

பிளாட் ஒன்றில் காதலனும் காதலியும் தங்களைப் பூட்டிக்கொண்ட நிலையில், விஷயம் அறிந்து விரைந்து வந்த பெண்ணின் பெற்றோர்கள் கதவைத் தட்டியும் அவர்கள் திறக்க மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, காதலர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட வழக்கறிஞர் ஒருவர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் திருமணத்தை நடத்தி வைக்க முயன்றுள்ளார். பெற்ற வளர்த்த மகளே காவல் துறையையும் வழக்கறிஞரையும் வைத்துத் தம்மை எதிர்கொள்வதைக் கண்டு அந்தப் பெண்ணின் தந்தை மனவேதனையின் உச்சத்திற்குச் சென்றுள்ளார்.

பிளாட் வாசலில் நின்று எவ்வளவோ கெஞ்சியும் மகள் கதவைத் திறக்காததால், வேறு வழியின்றி அந்தத் தந்தை கதவின் முன்பே கைகூப்பி வணங்கித் தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் “நீ நன்றாக இரு” எனக் கூறியபடி மனமுடைந்து அங்கிருந்து வீட்டை நோக்கித் திரும்பியுள்ளார். இந்த வேதனையான சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இன்றைய தலைமுறையினரின் போக்கைப் பார்த்துப் பலரையும் கவலையடையச் செய்துள்ளது.