கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு தினமும் நாடு முழுவதிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாபர், கோவிலின் புனித குளத்தில் கால்களை நனைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். இதற்கு கோவில் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்ததால், கோயில் உள்ளிட்ட புனித இடங்களில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் மீண்டும் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணர் ஓவியங்கள் வரைந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வந்தவர் ஜஸ்னா சலீம். இவர் குருவாயூர் கோவிலுக்கு சென்று ரீல்ஸ் எடுத்துள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் புகார் அளித்ததால், போலீஸார் ஜஸ்னா சலீமுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
