திமுகவில் பரபரப்பு..! இந்த 3 தொகுதிகளில் வெற்றிபெறாவிட்டால் பதவி பறிக்கப்படும்… எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்..!!

By Soundarya on கார்த்திகை 8, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டுமென்று திமுக பல வியூகங்களை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணியை பலப்படுத்த பல சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வருகிறது.  இப்படியான சூழலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் திமுக வெற்றிபெறாவிட்டால்  மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என  தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாராம்.

ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய தொகுதிகளில் திமுக கட்டாயம் வெற்றிபெற வேண்டும். குறிப்பாக, அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி MLA-வாக உள்ள வேப்பனஹள்ளியில் இந்த முறை திமுக தோற்கவே கூடாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.