திரைத்துறையில் இருந்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி.எம். விஜய், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ படத்திற்காகப் பெற்ற ₹15 கோடி வருவாயை மறைத்ததாகக் கூறி, அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யக் கோரி கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கில், திடீர் திருப்பமாக மனுதாரரே வழக்கை இப்போதைக்குத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளதால், முதல்வர் விஜய் மற்றும் அவரது தரப்பினர் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
