“பீர் குடிக்க வரும் நண்பர்களை எல்லாம்”.. ஐபிஎல் அணிகளை வறுத்தெடுத்த சுனில் கவாஸ்கர்.. ஐபிஎல்-லில் வெடித்த புதிய புயல்..!!

By Muthu Mani on ஆனி 2, 2026

Spread the love

நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தால் கேப்டன் பதவியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட், “எனது காதுகளில் பல குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன” என்று அணியின் அதிகப்படியான பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களை மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த 2025 ஏலத்தில் ₹27 கோடி என்ற சாதனை விலைக்கு வாங்கப்பட்ட பண்ட்டால், இந்த அழுத்தங்கள் காரணமாக கேப்டனாகவும் பேட்டராகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.

ரிஷப் பண்ட்டின் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுத் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடரில் உள்ள சில பயிற்சியாளர்கள் தங்களது தகுதி வாய்ந்த நபர்களை விடுத்து, தங்களோடு கோல்ஃப் விளையாடும் மற்றும் பீர் குடிக்கும் நண்பர்களையே உதவி ஊழியர்களாக நியமிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய வாய் சவடால் விடும் பயிற்சியாளர்களால்தான் சில அணிகள் தொடர் தொடங்கிய ஒரே மாதத்திற்குள் பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

   

அதே சமயம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரை கவாஸ்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஆர்சிபி அணிக்குத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (2025 மற்றும் 2026) கோப்பையை வென்று கொடுத்துள்ள ஆண்டி பிளவர், எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாகத் தன் வேலையைச் செய்வதாகவும், அவரிடம் இது போன்ற ‘பீர் கூட்டாளிகள்’ யாரும் உதவி ஊழியர்களாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், இதிலிருந்து மற்ற அணிகள் பாடம் கற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.