2025-ல் பதவி பறிப்பு… 2026-ல் புதுக் கட்சி?.. அண்ணாமலைக்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா… தமிழக அரசியலை உலுக்கப் போகும் அந்த ஒரு அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசியத் தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக விரைவில் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான புதிய கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், அண்ணாமலையும் தனிக்கட்சி அல்லது புதிய மக்கள் இயக்கம் தொடங்கும் முடிவில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தனது அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் பாஜகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அவர் அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

   

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேச அண்ணாமலைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க இதுவரை நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் தன்னிச்சையான போக்கால் தேசியத் தலைமை அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவைச் சந்தித்துத் தனது அதிருப்தியைப் பதிவு செய்ய அண்ணாமலை தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அமித் ஷா அலுவலகத்தில் இருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் வரவில்லை எனத் தெரிகிறது.

   

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை அண்ணாமலை சமீபத்தில் பகிரங்கமாக எதிர்த்ததில் இருந்தே, அவருக்கும் டெல்லி தலைமைக்கும் இடையேயான விரிசல் உச்சக்கட்டத்தை எட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. 2025ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டது முதலே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்ற பேச்சு பரவலாக இருந்தது. தற்போது சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கொங்கு மண்டலத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள், “தமிழகத்தை வழிநடத்த வாருங்கள் தலைவரே!” என்று போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருவது அவர் புதிய கட்சி தொடங்குவதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

 

பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றாலும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். டெல்லியில் நிதின் நபினுடனான இறுதிச் சந்திப்பிற்குப் பிறகு, ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது அண்ணாமலை தனது புதிய அரசியல் பாதையை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் இந்த அதிரடி நகர்வுகளுக்கு மத்தியில், டெல்லி பாஜக தலைமை அவர் மீது என்ன மாதிரியான இறுதி முடிவை எடுக்கப் போகிறது என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.