அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது, கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் (2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில்) தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்குகளின் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், “அரசியல் தலைவர்களுக்கும் ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு முழு உரிமை உண்டு” என்று தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்குகள் செல்லாது என அறிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
