தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கு ஒன்றைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் விஜய் தனது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி, இது குறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆனால், பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் இருந்த பிழைகளை விஜய் ஏற்கனவே திருத்தித் தாக்கல் செய்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், முதலமைச்சர் விஜய்க்கு எதிரான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. தவெக அரசு மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், நீதிமன்றத்தின் இந்த முக்கிய உத்தரவு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது கட்சியினருக்கு மிகப்பெரிய நிம்மதியையும் அரசியல் ரீதியாகப் பலத்தையும் கொடுத்துள்ளது.
