உங்ககிட்ட கார் இருக்கா?… இது மட்டும் இல்லனா ரூ.4000 அபராதம், 3 மாதம் சிறை… போக்குவரத்துத்துறை அலெர்ட்…!

By Srimathi on ஆவணி 9, 2025

Spread the love

சாலையில் காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டினால், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும், 2000-4000 வரை அபராதமும் விதிக்கப்படும். திருத்தப்பட்ட இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி, சாலையில் கார், பைக் என எந்த ஒரு வாகனம் ஓட்டினாலும் கட்டாயமாக காப்பீடு இருக்க வேண்டும். காப்பீடு இல்லாமல் ஓட்டும் வாகனத்திற்கு, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

புதிய விதிமுறைகளின் படி, மூன்றாம் தரப்பு காப்பீடு (Third Party Insurance) இல்லாமல், முதல்முறையாக வாகனம் ஓட்டினால் 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும், ரூ. 2000 அபதாரமும் விதிக்கப்படும். இந்தத் தவறை மீண்டும் செய்யும் பட்சத்தில் பிடிப்பட்டால், ரூ. 4000 அபதாரமும், 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும். காப்பீடு இல்லாத ஓட்டுனரின் லைசென்ஸ், உடனடியாக ரத்து செய்யப்படுவதில்லை என்றாலும், அபராதமும் சிறை தண்டனையும் கண்டிப்பாக வழங்கப்படும். மூன்றாம் தரப்பு காப்பீடு முக்கியத்துவம், சாலையில் ஏற்படும் விபத்துகளில், மூன்றாம் தரப்பு நபர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட உதவுகிறது.

   

இன்சூரன்ஸ் இல்லாமல் விபத்து ஏற்பட்டால், நஷ்ட ஈடு தொகை லட்சக்கணக்கில் இருக்கும், இதை சொந்த செலவில் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது நிதிச் சுமையாக மாறிவிடும். சிறிய செலவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு காப்பீடு, மூன்றாம் தரப்பு உரிமையானவர்களுக்கும், அவர்களின் வாகனத்திற்கும் பாதுகாப்பளிக்கிறது. வாகனத்திற்கு  கூடுதல் பாதுகாப்பு வேண்டுமென்றால், காம்ப்ரிஹென்சில் இன்சூரன்ஸ் (Comprehensive Insurance) எடுக்கலாம். இன்ஷூரன்ஸ் எடுப்பது சாலையின் பாதுகாப்புக்கும், சட்டத்திற்கும் அவசியம். அது இல்லாமல் வாகனம் ஓட்டுவது உங்கள் வாழ்க்கையில், மிகப்பெரிய நிதிச் சுமையை அதிகரித்து விடும்.