மக்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!

By Divyamayakannan on ஆவணி 9, 2025

Spread the love

தமிழ்நாட்டில் வீட்டு வசதி வாரியம் 2015 மார்ச் 31 முன் தவணைக்காலம்  முடிந்தோர் அபராத வட்டி செலுத்தி வந்தனர். அந்த அபராத வட்டியை தமிழக அரசு தற்போது தள்ளுபடி  செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர்களுக்கு மலிவு விலையில் வீடு, மனை மற்றும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது.. அடையாளச் சான்று, முகவரி சான்று, கடன் ஆட்சேபனை இல்லாத சான்று மற்றும் விற்பனை பத்திரம் வழங்கப்படும்.

இந்நிலையில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் படி வீடு மனை குடிஇருப்பு  ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவைத் தொகையை பலரும் செலுத்தாமல் உள்ளனர். தாமதமாக, முழுமையாக மாதத் தவணையை கட்டாதோருக்கு அபராத வட்டி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அபராத வட்டி தள்ளுபடி செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதைப் பற்றி சட்டசபையில் பேசிய போது, வட்டி ரத்து செய்து விட்டதாக  கூறியுள்ளனர்

   

நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இனங்களில் விரைவாக விற்பனை பத்திரம் பெற வட்டித் தள்ளுபடி சலுகையானது வரும் 2026 மார்ச் வரை நடைமுறைப்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது எனவீட்டு வசதி வாரியம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.