மின்னல் வேகத்தில் வந்த கார்…! தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் பறந்த பயங்கரம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 18, 2026

Spread the love

குஜராத் மாநிலம் துவாரகா அருகே போர்பந்தர் நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதி, சினிமா காட்சிகளைப் போல அந்தரத்தில் பறந்து சற்றுத் தொலைவில் சென்று விழுந்த அதிர்ச்சியூட்டும் விபத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியானி கிராமத்திற்கு அருகிலுள்ள ஹர்ஷத் பகுதியில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது; நெடுஞ்சாலையில் மிக அதிவேகமாக வந்த அந்தக் கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரின் மீது பயங்கரமாக மோதியது.

மோதலின் வேகத்தில் அந்தக் கார் பல அடி உயரத்திற்கு அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, தலைகீழாகப் புரண்டபடி சற்றுத் தொலைவில் சென்று விழுந்த திகிலூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிப் பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்துள்ள நிலையில், விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.