கேப்டன் விஜயகாந்த் 1979இல் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த சினிமாவில் அறிமுகமானார். எந்த சினிமா பின்புறமும் இல்லாத விஜயகாந்த் கதாநாயகனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்கு வந்தார். ஆனால் முதல் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிக்க அவர் வாங்கிய முதல் சம்பளம் வெறும் 600 ரூபாய் மட்டுமே. இந்தப் படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த ஒரு சில படங்கள் தோல்வியை மட்டுமே கொடுத்தது. 1979இல் தூரத்து இடிமுழக்கம் என்ற படம் மூலம் கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார் விஜயகாந்த்.
இந்தப் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 2000. இந்தப் படத்திற்குப் பிறகு தொடர் வெற்றிகளை கொடுத்த விஜயகாந்த் 10 வருடத்தில் சுமார் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வெறும் 600 ரூபாயில் ஆரம்பித்த சம்பளம் பத்து வருடத்தில் 30 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. ரஜினிக்கு பிறகு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகரும் இவர் தான். என் நிலையில் விஜயகாந்த் கடைசி பத்து படங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கஜேந்திரா:
2004 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு படக்குழுவினர் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்த நிலையில் தேவா இசை அமைத்ததால் பாடல்களும் சூப்பர் ஹிட் கொடுத்தது. துரை கிருஷ்ணா தயாரித்த இப்படத்தை ஏழரை கோடி ரூபாய் செலவில் எடுத்த நிலையில் 8 அரை கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. இதில் கேப்டனுக்கு சம்பளமாக மூன்று கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தால் நஷ்டமான விநியோகஸ்தர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தனது சம்பளத்திலிருந்து எடுத்துக் கொடுத்த விஜயகாந்த் அந்த நஷ்டத்தை ஈடு கட்டி உள்ளார்.
நெறஞ்ச மனசு:
கஜேந்திரா திரைப்படம் ரிலீஸ் ஆகிய இரண்டு மாதத்தில் எந்த திரைப்படமும் வெளியாகி உள்ளது. சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்திற்கு பெரிய அளவில் எந்த பிரமோஷனும் செய்யவில்லை. ஞானவேல் தயாரித்த இப்படத்திற்கு கேப்டன் இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இந்த திரைப்படம் வெறும் நஷ்டத்தை கொடுத்தது. ஆறு கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நான்கரை கோடி மட்டுமே வசூல் செய்தது. தயாரிப்பாளர் தனது நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடு செய்த நிலையில் விநியோகஸ்தர்கள் தனது நஷ்டத்தை ஈடு செய்ய தன்னுடைய அடுத்த படத்தை தானே தயாரித்து வெளியிட்டார் கேப்டன்.
சுதேசி:
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தான் சுதேசி. இந்த திரைப்படத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்களின் தம்பி சுதீஷ் மற்றும் விஜயகாந்த் இருவரும் சேர்ந்து தயாரித்து வெளியிட்டனர். ஏழு கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் ஆறரை கோடி மட்டுமே வசூல் செய்தது. கேப்டன் சினி என்ற விஜயகாந்த் தயாரிப்பு கம்பெனி மூலமாக வெளிவந்த இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் தான் விஜயகாந்த் கொடுத்துள்ளார். இந்த படத்தை இவர்களை தயாரித்ததால் கேப்டனின் சம்பள விவரம் வெளியிடப்படவில்லை.
பேரரசு:
காஜா மௌதின் தயாரித்த இந்த திரைப்படத்தை உதயம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜயகாந்த் இரண்டு ரோலில் நடித்திருப்பார். பெரும் ஏழு கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்காக விஜயகாந்த் மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
தர்மபுரி:
பேரரசு இயக்கத்தில் ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் விஜயகாந்த் வித்தியாசமான ரோலில் நடித்திருந்த நிலையில் சுமார் 7.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 19 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்திற்கு கேப்டன் மூணு கோடியே 80 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
சபரி:
சுரேஷ் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சலீம் சந்திரசேகர் தயாரித்திருந்தார். ஏழு முப்பது கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 5.30 கோடி மட்டுமே வசூல் செய்தது. இந்த படத்திற்கு விஜயகாந்த்க்கு 3.30 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தால் நஷ்டம் ஏற்பட்ட விநியோகஸ்தர்களை அழைத்து அடுத்த படம் தன்னுடைய சொந்த தயாரிப்பில் இருக்கும் என கூறியுள்ளார்.
அரசாங்கம்:
ஆர் மகேஸ் இயக்கிய இந்த திரைப்படத்தை கேப்டன் சினி தான் தயாரித்திருந்தனர். எட்டு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 12 கோடி வசூல் செய்தது. விஜயகாந்த் சொன்னதைப் போலவே விநியோகஸ்தர்களுக்கு படம் மூலம் லாபம் கிடைத்தது. இப்படத்தில் விஜயகாந்துக்கு சம்பளமும் இல்லை.
மரியாதை:
D.சிவா தயாரித்த இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்த நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு படம் ஹிட் ஆகவில்லை. இந்த படத்திற்கு விஜயகாந்த் 2.30 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
எங்கள் ஆசான்:
2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான திரைப்படம் தான் எங்கள் ஆசான். கலைமணி இயக்கிய இந்த திரைப்படத்தை தங்கராசு என்ற தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். எட்டு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 4.30 கோடி மட்டுமே வசூல் செய்தது. வழக்கம்போல நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்காக அடுத்த படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியிட்டார் விஜயகாந்த். இந்த படத்திற்கு விஜயகாந்த் வாங்கிய சம்பளம் 2.30 கோடி.
விருதகிரி:
2010 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசந்தம் என எல்லாமே விஜயகாந்து தான். படத்தை தயாரித்ததும் கேப்டன் சினி என்ற இவருடைய தயாரிப்பு கம்பெனி தான். மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒன்பது கோடி வசூல் செய்தது. விநியோகஸ்தர்கள் லாபம் போக கேப்டன் தயாரிப்பு கம்பெனிக்கு மூன்று கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இதுதான் விஜயகாந்த் சம்பளம். விருதகிரி தான் கேப்டன் விஜயகாந்தின் கடைசி படமாகும்.