இயக்குனர் சிகரம் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் பூவிலங்கு. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் முரளி. இவர் கன்னட திரை உலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்த லிங்கையாவின் மகன் ஆவார். பிரேமா வருவா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது நடிப்பை வெளிப்படுத்திய முரளி அப்படத்தின் தமிழ் ரீமேக் ஆன பூவிலங்கு படத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் பகல் நிலவு, வண்ண கனவுகள், புதுவசந்தம், இதயம் மற்றும் ஒரு தலை ராகம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
இப்படி முரளி தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்த நிலையில் அவருடைய மகன் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி திரைப்படத்திலும் முரளி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். முரளிக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள். அதில் மூத்த மகள் காவியா, இரண்டாவது மகன் அதர்வா மற்றும் மூன்றாவது மகன் ஆகாஷ். இதில் அதர்வா தந்தையைப் போல நடிகராகிவிட்ட நிலையில் மூன்றாவது மகனான ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கல்லூரியில் படித்த சக பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முரளியின் மூத்த மகள் பெயர் காவியா. அவர் ஒரு மருத்துவராக உள்ளார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக உள்ளார். இந்த நிலையில் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே தமிழில் முக்கிய ஹீரோவாக இருந்து வரும் நிலையில் தற்போது அவருடைய இளைய மகன் ஆகாஷ் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். அதன்படி ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள நேசிப்பாயா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், அதர்வா மற்றும் முரளியின் மனைவியை ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தன்னை வெளிக்காட்டாமல் இருந்த மறைந்த நடிகர் முரளியின் மனைவி தன்னுடைய மகனுக்காக நேற்று ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசியவர் தன்னுடைய மகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க