தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/mgr-birthday-anniversary.jpg)
படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். மிகப்பெரிய வல்லமையுடன் முன்னணி ஹீரோவாக திகழ்ந்த என்று யார் ஒரு கட்டத்தில் தன் படங்களுக்கு தயாரிப்பாளர்களை கடந்து தானே முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்தார். அப்போதுதான் படப்பிடிப்பில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி அந்த திட்டத்தையும் செயல்படுத்தி காட்டினார். ஒருமுறை தன் படப்பிடிப்பில் 170 பேர் சாப்பிடணும். ஆனால் முதலில் 120 பேருக்கு மட்டுமே பந்தி பரிமாறப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடுவில் எம்ஜிஆர்வும் சாப்பிட அமர்ந்து கொண்டு இருந்தார்.
/indian-express-tamil/media/media_files/L6e73Emxi1TfCNUHVD1U.jpg)
அப்போது எம்ஜிஆர் இலையில் என்னென்ன உணவுகள் இருக்கிறதோ அந்த உணவுகள் அனைத்தும் மற்றவர்கள் இலையிலும் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னதை நினைவில் கொண்டு சாப்பாடு பரிமாறுபவர்கள் வேலை செய்துள்ளனர். அப்போது சாப்பாடு பரிமாறுபவர்கள் எம்ஜிஆர் இடம் சென்று இப்போது 120 பேருக்கு மட்டுமே சாப்பாடு உள்ளது இவர்கள் சாப்பிடுவதற்குள் மற்றவர்களுக்கான சாப்பாடு வந்துவிடும் பிறகு அவர்களுக்கு பரிமாறிக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். உடனே இதைக் கேட்ட எம்ஜிஆர் அப்போ நான் அந்த 50 பேர் கூட சாப்பிட்டுக்கிறேன் நீங்க சாப்பிடுங்க என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அருகில் இருந்த ஊழியர் இதற்கு எதற்கு நீங்கள் எழுந்திரிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கு எம்ஜிஆர், இப்போ நான் இந்த சாப்பாட்டை சாப்பிட்டால் அடுத்து வர சாப்பாட்டில் ஏதாவது கலவை சாப்பாடு போடலாம். அந்த 50 பேருக்கும் இதே சாப்பாடு கிடைக்குமா என நிச்சயம் இல்லை. இப்போ நான் இந்த சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் எனக்கு என்ன கொடுக்குறாங்களோ அதுதானா அந்த 50 பேருக்கும் கொடுப்பாங்க என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
