Connect with us

CINEMA

கேப்டன் மில்லர் vs அயலான்- தெரிக்கவிட்ட தனுஷின் கேப்டன் மில்லர் ட்ரைலர்

நடிகர் தனுஷின்  கேப்டன் மில்லர் படத்துடன் மோதவுள்ள சிவகார்த்திகேயனின் அயலான். இதனால் ரசிகர்களிடையே   வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.  நடிகர் சிவகர்த்திகேயன்  சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர்.சிவகார்த்திகேயனின்  அயலான் படம்  சுற்றுச்சுழல் கேடு,  அறிவியல் வளர்ச்சி  போன்றவற்றை எடுத்துசொல்லும் வகையில் ஏலியன்  கான்சப்டில் எடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

   

சுமார் 20 படங்களுக்கு மேலாக நடித்து    முன்னனி நடிகராக மாறிவரும்  சிவகார்த்திகேயன் சமிபத்தில் அவர்  நடித்த ஒருசில படங்களான பிரின்ஸ் ,மாவீரன் போன்ற  படங்கள்   அவருக்கு எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை.அவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில்  நடித்த அயலான் படம்  தயாரித்து பல வருடங்களான நிலையில் வருகிற 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு   வெளியாக உள்ளது.

இப்படம் பல சிக்கல்களை  தாண்டி  தற்போது வெளியாக இருக்கும் நிலையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதனால் இதனால் இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படத்தின் ட்ரைலர் வெளியாகியது.

அயலான் பட ட்ரெய்லர் வெளியிட்ட மறுநாள்தான்     தனுஷின் கேப்டன் மில்லர்  ட்ரெயிலர் வெளியானது.  ஒரு நாள் கேப்பில் வெளியான போதும் கேப்டன் மில்லர் படம் 1m மில்லியன் அளவு அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் கன்னட நடிகைதான சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். இருபடங்களில் வெற்றி  யாருக்கு? என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top