தமிழ் சினிமாவில் வசூல் நாயகர்களாக திகழ்ந்து வரக்கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இன்றும் அவரது ஒரு ஒரு படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அப்படியிருக்க, அவர் மீதும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தான் வருகிறது. சினிமா சம்பந்தமான எந்த ஒரு விழாவுக்கும் அவர் வர மாட்டார். தான் நடித்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள், நேர்காணல்களில் கலந்து கொள்ள மாட்டார். இயற்கை பேரிடர்கள் வரும் போதோ, அல்லது தனது பிறந்தநாளுக்கு மக்களு உதவும் ரசிகர்களுக்கோ கூட அவர் எந்த ஒரு உதவியும் செய்ய மாட்டார் என பலர் குற்றச்சாட்டுகள் அவர் மீது ஒரு புறம் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

#image_title
ஆனால் இந்தியாவில் அவர் பொதுவாக சாதாரண மனிதர் போல் நடமாட முடியாது என்பதால், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வீதிக் கடைகளில் டீக் குடிப்பது, சாதாரண கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது என இயல்பாக நடந்து கொள்வது அவருக்கு பிடிக்கும் என்பதால், அவர் இங்கு அப்படி இருப்பதில்லை என்கின்றனர் அவரது வட்டாரங்கள். இந்த நிலையில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் அஜித் மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது ‘இப்போது வரவங்க பொறுக்கியும் திருடங்களாகவே வராங்களே. மக்களுக்கு என்னயா திருப்பி செஞ்சீங்க? எங்க மக்களையே சுரண்டி திங்கிறவங்கள பத்தி நான் பேச கூடாதா? ’

#image_title
‘ நீங்க அஜித் கிட்ட தங்கர் பச்சானை பத்தி கேளுங்களேன். ஏன் ஒருத்தரும் கேட்க மாட்டீங்க. என்ன மட்டுமில்ல. வேற யாரையாவது பத்தி கேளுங்க. தெரியாது. ஏன்னா அவர் வேறொரு கிரகத்துல இருக்கிறாரு. வேறொரு கோள்ல வாழ்ந்துட்டு இருக்கிறாரு. ’ ‘அவர் தயாரிப்பாளர்களை சந்திக்க மாட்டாரு. பணம் கொடுத்து உடல் உழைப்பை போட்டு எத்தனை பேரு அவர் படத்தை வந்து பாக்குறான்? அந்த பார்வையாளர்களையும் பார்க்கிறது இல்ல. ராஜவாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கீங்க. அத கொடுத்தது அந்த உழைக்கும் மக்கள். ஆனால் அவர்கள் யாரும் வேணாம். கோடி கோடியா வரணும். வாங்கனும். இதுதான் ஒரே குறிக்கோள்’ என கொட்டித் தீர்த்திருக்கிறார்.

#image_title
