நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 மோதலுக்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மன் நகைச்சுவையான உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டாஸ் போடுவதற்கு முன்பு கில்லின் புதிய தாடி தோற்றத்தைக் கண்ட ஹர்திக், அவரைக் கேலி செய்து கிண்டலடித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கமாக சுத்தமாக ஷேவ் செய்த அல்லது லேசான தாடியுடன் காணப்படும் ஷுப்மன் கில், இந்த சீசனில் சற்று அடர்த்தியான புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, கில்லின் தாடியைச் சுட்டிக்காட்டி அவர் மிகவும் “முதிர்ச்சியாக” தெரிவதாகக் கூறி ஜாலியாகச் சிரித்தார். மைதானத்தில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியிலும், முன்னாள் சக வீரர்களான இவர்களிடையே இருக்கும் நட்புறவை இந்த வீடியோ வெளிப்படுத்தியது.
இந்த வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளது. ஹர்திக்கின் கேலிக்கு கில் சிரித்துக்கொண்டே பதிலளித்ததோடு, இருவரும் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். குஜராத் அணியின் கேப்டனாக முன்பு இருந்த ஹர்திக், தற்போது மும்பை அணிக்கு மாறியுள்ள போதிலும், கில்லுடனான அவரது நெருக்கம் இன்னும் குறையவில்லை என்பதை இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு உணர்த்தியது.
