தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.5 கோடி வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இது அவர் தனது தந்தைக்கே கடன் கொடுத்துள்ளார் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அரசியல் களத்தில் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், மகனுக்கும் தந்தைக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் ஏன் வேட்புமனுவில் இடம்பெற்றது என்பது குறித்து விவாதங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், ஆண்டிற்கு ரூ.200 கோடி வரை சம்பாதிக்கும் ஒரு மகன், தனது தந்தைக்கு ரூ.5 கோடி வழங்குவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம் என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய் தனது வேட்புமனுவில் அதை ‘கடன்’ என்று குறிப்பிடவில்லை, ‘கொடுத்த தொகை’ என்றுதான் குறிப்பிட்டுள்ளார் எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் தங்களுக்குள் இருக்கும் பணப்பரிமாற்றம் குறித்து வெளியாகும் தேவையற்ற வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
