கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது என்று முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி பேசியுள்ளது பரபரப்பு கிளப்பி உள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், பாஜக ராட்சத பலத்துடன் உள்ளது.. நம்மிடம் கொள்கை பலம் இருக்கின்றது. காங்கிரஸ் அல்லாத முதல்வர்களில் ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் சிறப்பாக செயல்படுவார். ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜகவை அரவணைத்து செல்லலாம். ஆனால் அதனை தவிர்த்து விட்டு ராகுலுக்கு துணையாக நிற்கின்றார். பாஜக – ஆர் எஸ் எஸ் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். தவறான கருத்துக்களை திரும்பத் திரும்ப சொல்லி மக்கள் மனதில் விதைக்கிறார்கள். எதிர்மறை கருத்துக்களுக்கு அந்த இடத்திலேயே பதிலடித் தர வேண்டும்.
நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்கு பெற வேண்டும். இது கூட்டணிக்கு எதிரான கருத்து கிடையாது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பானவர். ஆனால் அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இந்த கூட்டணியை விரும்புகிறேன். அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும். அதுபோல நாமும் கூட்டணியில் வளர வேண்டும் என்று அழகிரி பேசியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் திமுகவில் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதோடு ஆட்சியில் பங்கு கேட்டு வரும் நிலையில் தற்போது இவருடைய பேச்சும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ப்பதில் தாமதம் அல்லது தயக்கம் நிலவுவதாகக்…
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…