தொழில்நுட்பம் செயலிழந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த ஒரு தாய் தனது ஆட்டிசம் பாதித்த மகனுக்கு வழங்கிய விசித்திரமான தீர்வு, உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெசிகா பிளெட்சர் (Jessica Fletcher) தன் 11 வயது மகன் ஹன்டருடன் (Hunter) உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, ஹன்டர் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் “ஏஏசி” மின்னணு சாதனத்தின் மின்கலன் (battery) தீர்ந்துபோனது. பேசும் திறனற்ற ஹன்டருக்கு அந்தச் சாதனம் மட்டுமே தன் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரே வழியாக இருந்தது. எனினும், சிறிதும் பதற்றமடையாத ஹன்டர், அங்கிருந்த ஒரு பேப்பர் நாப்கினில் விசைப்பலகையை (keyboard) வரைந்து, அதன் எழுத்துக்களைச் சுட்டிக்காட்டித் உணவை ஆர்டர் செய்தார்.
மகனின் இந்தச் சமயோசித புத்தி கூர்மையைக் கண்டு வியந்த ஜெசிகா, “தொழில்நுட்பம் கைகொடுக்காத சூழலில் மாற்று வழி என்ன?” என்று சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாக, ஒரு பச்சை குத்தும் கலைஞரை அணுகி, தனது முன்கையில் விசைப்பலகை அமைப்பை நிரந்தரப் பச்சையாக (Tattoo) வரைந்து கொண்டார். இதில் எழுத்துக்கள் மட்டுமின்றி மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிக் குறியீடுகளும், “ஐ லவ் யூ” பொத்தானும் இடம்பெற்றிருந்தன. இந்தத் தொடுதிரை போன்ற பச்சையை முதன்முதலில் பார்த்த ஹன்டர், அதில் எழுத்துக்களைத் தொட்டுத் தனது முதல் வார்த்தையாக “மாமா” (Mama) என்று தட்டச்சு செய்து தாயைச் சிலிர்க்க வைத்தார்.
캐나다 한 엄마의 팔뚝엔 커다란 문신
장미도, 나비도 아니었다. 검은색 키보드.
11살 아들 헌터는 자폐가 있고, 말을 하지 못한다.
평소엔 태블릿으로 의사를 표현했는데,
두 달 전 외식 자리에서 배터리가 꺼져버렸다.
급한 대로 종이에 알파벳을 적어주자, 헌터가 종이를
뒤집어 키보드… pic.twitter.com/hyamZqyNoO— 쪼리 JJory (@TBJorry) August 27, 2026
இந்த விசைப்பலகைப் பச்சை, அவசர காலக் கருவகி செயல்படுவதோடு மட்டுமல்லாமல், ஹன்டருக்குத் தேவையான தனி உரிமையையும் (privacy) வழங்குகிறது. வழக்கமான ஏஏசி கருவிகள் உரக்கச் சத்தமிட்டுப் பேசும் என்பதால், பொது இடங்களில் மற்றவர்களின் கவனம் அவர்கள் மீது விழக்கூடும். ஆனால், தாயின் கையில் இருக்கும் இந்த விசைப்பலகை மூலம், ஹன்டரால் யாருக்கும் தெரியாமல் அமைதியான முறையில் உரையாட முடிகிறது. ஜெசிகா தனது மகனுடன் பேசும் இந்த வீடியோவை முகநூலில் பகிர்ந்தபோது, அது உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமான ‘லைக்குகளைப்’ பெற்றுப் பெருமளவில் வைரலானது.
இந்த எளிய யோசனை தற்போது ஒரு உலகளாவிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஹன்டரின் பள்ளி நண்பர்கள் அவருடன் எளிதாகத் தொடர்புகொள்ள விரும்பியதால், சட்டையின் கை மடிப்புகளில் விசைப்பலகை அச்சிடப்பட்ட ஆடைகள் உருவாக்கப்பட்டன. மேலும், மருத்துவர்கள், முதலுதவிப் பணியாளர்கள் மற்றும் பிற பெற்றோர்களும் இத்தகைய முறையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். “தொடர்புக்கான தடைகளை அகற்றும் போதுதான், பேச முடியாத நபர்கள் தங்களின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த முடியும்” என்று கூறும் ஜெசிகா, தன் மகனின் குரல் ஒருபோதும் முடக்கப்படக் கூடாது என்பதற்காக எத்தனை தழும்புகளையும் ஏற்கத் தயார் என்கிறார்.
