இந்தியாவில் வருகின்ற நவம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ஓய்வு ஊதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் நடைபெற உள்ளதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் பென்ஷன் வாங்கும் அனைவரும் ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரம்மாண்ட பத்ராவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆயுள் சான்றிதழை 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவே ஆயில் சான்றிதழ். ஓய்வூதியதாரர்களுக்கு இந்திய அரசு சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் வகுத்துள்ளது. ஆயில் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் தேதிக்கு உள்ளே வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இப்போது வாழ்க்கைச் சான்றிதழை வீட்டிலிருந்து எளிதாக டெபாசிட் செய்யலாம்.
இதற்காக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைத்தளம் jeevanpraman.gov.in என்ற வெப்சைட்டை பயன்படுத்தி டெபாசிட் செய்யுங்கள். டென்ஷன் வாங்குவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 845 நகரங்களில் நடத்தப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களில் 1.62 கோடி பேர் சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 1800க்கும் கூடுதலான மாவட்டங்கள், நகரங்கள் , சிறு நகரங்களில் (2500 இடங்களில்) நவம்பர் 1 முதல் 30 வரை முகாம் நடக்க உள்ளதாக மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த முகாம்களில் ஓய்வு ஊதியம் வழங்கும் வங்கி கிளைகள், அஞ்சலக பேமெண்ட் வங்கிகள், ஓய்வூதியத்தார்கள் நலச்சங்கம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தொலைத் தொடர்பு துறை, ரயில்வே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் நிறுவனம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாதுகாப்புத் துறையின் தலைமை கணக்கு அலுவலகம் உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து இம்முகாம் நடத்த தயார் நிலையில் உள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
