பீகார் மாநிலத்தில் சிவன் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது வயதான நபருக்கு பல மாதங்களாக கண் பார்வை குறைபாடும், முக வீக்கமும் இருந்து வந்துள்ளது. அதனால் குடும்பத்தினர் பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணுக்கு கீழே உள்ள எலும்பில் பல் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ந்து போய் உள்ளனர்.
உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து பல் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் நிம்மி சிங்கின் மேற்பார்வையில், சிறந்த அறுவை சிகிச்சை குழுவை வைத்து சிகிச்சை மேற்கொண்டு பல்லின் வேர்ஆழத்தை கண்டறிய மேம்பட்ட CBCT ஸ்கேன் செய்யப்பட்டது. பல மணி நேரத்திற்குப் பிறகு கண்ணுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் வெற்றிகரமாக பல்லை நீக்கி உள்ளனர். அனைவருக்கும் வாயில் தான் பற்கள் வளரும், கண்ணின் கீழே வளர்ந்துள்ளது மிகவும் அரிதான ஒன்றாகும் என்று டாக்டர் தரப்பில் கூறப்படுகிறது.
