தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆவணி 15, 2025

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து முதல்நிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 24 பாட வேலைகள், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 28 பாட வேலைகளும் குறைந்த பட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர் – மாணவர் விகிதத்தை பின்பற்ற வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி மாணவராட்சி, நகராட்சியாக இருந்தால் 30 மாணவர்களும் ஊரகப்பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். அதனைப் போலவே பணி நிர்ணயம் செய்யும்போது முடி பாடத்தில் 24 பாட வேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாட வேளைக்கும் கூடுதலாக இருந்தால் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம். இதனைத் தவிர ஒரு பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி அதில் ஒரு பணியிடம் உபரியாக இருந்தால் அதில் பணியாற்றுபவர்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.