“அன்பு மாப்பிள்ளை பர்வேஸ்”…. மேடையிலேயே உருகிய சி.விஜயபாஸ்கர்…. 7 எம்.எல்.ஏ-க்கள் அவுட்… அடுத்து கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன்… தவெக-வில் இணையும் 10,000 பேர் … அதிரும் தமிழக அரசியல்….!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் சுமார் 10 ஆயிரம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பிரம்மாண்ட விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பலரும் தவெகவை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை 7 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்த சி.விஜயபாஸ்கர், மேடையில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரைப் போல அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அங்கிருந்த தொண்டர்களிடம், “எல்லாம் அப்படியே உட்கார்ந்து ஒரு செல்பி எடுத்து, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுங்கள்; இது புதிய மாற்றம், புதிய மலர்ச்சி, புதிய நம்பிக்கை, நல்ல தொடக்கம்!” எனக் கூறி அரங்கையே அதிரவைத்தார்.

   

இந்த நிகழ்வில் இன்னும் 13 முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் இணையவிருப்பதாகக் குறிப்பிட்ட சி.விஜயபாஸ்கர், ஏற்கனவே வந்து சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவேற்றார். தொடர்ந்து, தவெகவின் முக்கிய நிர்வாகியான பர்வேஸை மேடைக்கு அழைக்கும்போது, “என்னுடைய அன்பு மாப்பிள்ளை பர்வேஸ்” என்று அவர் உருகிய விதம் அங்கிருந்த தொண்டர்களை நெகிழச் செய்தது.

   

சி.விஜயபாஸ்கர் போன்ற மூத்த தலைவர்கள் தவெகவிற்குள் வந்தால் கட்சியில் தனது முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்று பர்வேஸ் தரப்பில் எண்ணியதாகக் கூறப்பட்ட நிலையில், சி.விஜயபாஸ்கரின் இந்த அன்பான மாப்பிள்ளை அழைப்பு அனைத்து சலசலப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. மேலும், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரையும் அன்போடு வரவேற்ற அவர், அடுத்தடுத்து வரும் எம்.எல்.ஏ-க்களுக்கு வழிவிடுமாறு கூட்ட நெரிசலைத் சீரமைத்து, ஒட்டுமொத்த விழாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.