நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தோல்வி குறித்து ஆராயவில்லை எனக்கூறி எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனியாகப் பிரிந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேலுமணி அணியினர் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி தரப்பின் கொறடா உத்தரவை மீறி ஆதரவளித்ததால், தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வேலுமணி தரப்புக்கு இடம் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெகவுக்கு ஆதரவளிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆட்சேபனையால் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
அமைச்சர் பதவி கிடைக்காததைத் தொடர்ந்து, வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்; இவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கே திரும்பிவிட்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம் செல்லவில்லை.
தற்போது சி.வி.சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார்கள் எனப் பேசப்படும் நிலையில், விஜயபாஸ்கரோ தான் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்தான் நடப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதேநேரம், சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால், அவருக்குத் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி வழங்கப்படும் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் என்றும், அப்படி நடக்கும் பட்சத்தில் தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோருக்கு…
காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் ஒரு மகள். சரியாக அந்த…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் அண்மையில் இயற்கை எய்தினார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத்…
மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த ரீமா, தனது அண்டை வீடான அமித்தின் வீட்டிற்குச் சென்று அந்த அதிர்ச்சியூட்டும் கோரிக்கையை வைத்தபோது,…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடையத்…
சமீபத்தில் சில இளைஞர்களைப் பிடித்த போக்குவரத்துப் போலீஸார், அவர்களிடம் லஞ்சமாகப் பணத்தைக் ரொக்கமாகக் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள்…