மழை பெய்ஞ்சா கண்ணீர் வடியும் குகை.. பல்கேரியாவில் இருக்கும் ‘கடவுளின் கண்கள்’.. இயற்கையின் உச்சக்கட்ட மாயாஜாலம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!

Spread the love

ஐரோப்பிய நாடான பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ள ‘ப்ரோஹோத்னா குகை’ (Prohodna Cave) உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த குகையின் கூரையில் இயற்கையாகவே மனித கண்கள் போன்ற வடிவில் இரண்டு பிரம்மாண்ட துளைகள் அமைந்துள்ளன. இதன் விசித்திரமான தோற்றத்தின் காரணமாகவே, உலக மக்கள் இதனை ‘கடவுளின் கண்கள்’ (Eyes of God) என்று அன்போடு அழைக்கிறார்கள். பகல் நேரத்தில் சூரிய ஒளி இந்த துளைகள் வழியாக குகைக்குள் ஊடுருவி வரும்போது, நீல வானமே குகைக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற ஒரு மாயாஜாலக் காட்சி அரங்கேறுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அரிப்பு மற்றும் சுண்ணாம்புப் பாறைகளின் ரசாயன மாற்றங்களால் இந்த குகை உருவாகியுள்ளது. சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் இக்குகை மேலும் மர்மமாகவும், பிரமிப்பாகவும் மாறுகிறது. பலத்த மழை பெய்யும் போது, இந்த கண் போன்ற துளைகளில் இருந்து தண்ணீர் கீழே கொட்டுவது, பார்ப்பதற்கு ஏதோ கடவுளே நேரில் நின்று அழுது கண்ணீர் வடிப்பது போன்ற ஒரு விவரிக்க முடியாத தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

எந்தவித நுழைவுக் கட்டணமும் இல்லாத, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 880 அடி நீள குகை வெறும் இயற்கை அதிசயத்தோடு நின்றுவிடாமல் சாகச விரும்பிகளின் சொர்க்கமாகவும் திகழ்கிறது. இந்த குகைக்குள் பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) மற்றும் ராக் கிளைம்பிங் (Rock Climbing) போன்ற அதிரடி சாகச விளையாட்டுகளும் அனுமதிக்கப்படுவதால், உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த அதிசயத்தைக் காண இங்குக் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“அதிமுகவில் வெடித்த ஜாதி அரசியல் சண்டை”… வேலுமணிக்கு கல்தா கொடுக்க ஸ்கெட்ச் போட்ட கே.பி.முனுசாமி… அடுத்த பரபரப்பு…!

அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோருக்கு…

7 minutes ago

“உனக்கு எல்லாமே செஞ்சேனே”.. கோவில் வாசலில் காதலனுடன் நின்ற மகளின் காலில் விழுந்து அழுத தந்தை.. கலங்கும் இணையதளம்..!!

காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் ஒரு மகள். சரியாக அந்த…

7 minutes ago

“நான் பார்த்துக்குறேன் நண்பா”… துயரத்திலும் நெகிழ வைத்த நட்பு… அஜித்தின் கார் பயணத்தின் போது விஜய் கொடுத்த அந்த உருக்கமான வாக்குறுதி…!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் அண்மையில் இயற்கை எய்தினார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத்…

14 minutes ago

ஒரு இரவுக்கு 35 லட்சமா?.. அண்டை வீட்டுப் பெண் கொடுத்த ஆபரேஷன்.. மனைவியையே விலை பேசிய கணவன்.. நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்த சம்பவம்..!!

மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த ரீமா, தனது அண்டை வீடான அமித்தின் வீட்டிற்குச் சென்று அந்த அதிர்ச்சியூட்டும் கோரிக்கையை வைத்தபோது,…

15 minutes ago

“அமெரிக்கா செய்த தவறு.. 60 நிமிடத்தில் ஈரான் காட்டிய விஸ்வரூபம்”… மொத்தமும் சர்வ நாசம்… நடுங்கும் உலக நாடுகள்…!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ராணுவ தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடையத்…

20 minutes ago

கேஷ் இல்லனா என்ன.. UPI பண்ணு!.. லஞ்சம் வாங்கிய டிராபிக் போலீசின் முகத்திரையைக் கிழித்த இளைஞர்கள்.. கொந்தளித்த நெட்டிசன்கள்..!!

சமீபத்தில் சில இளைஞர்களைப் பிடித்த போக்குவரத்துப் போலீஸார், அவர்களிடம் லஞ்சமாகப் பணத்தைக் ரொக்கமாகக் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள்…

22 minutes ago