மக்களே உஷார்… கையில ரூ 50,000 மேல் இருந்தா… இடைத்தேர்தல் அறிவிப்பு…!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால், குறிப்பிட்ட தொகுதிகளில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ 50,000 வரை மட்டுமே ரொக்கப் பணமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ரூ 50,000-க்கும் அதிகமான பணத்தைக் கொண்டு செல்ல வேண்டுமானால், அதற்குரிய வங்கிப் பரிவர்த்தனை ரசீது அல்லது தொழில்முறை ஆதாரங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சோதனையின் போது சரியான ஆவணங்கள் இல்லையெனில், பறக்கும் படையினரால் அப்பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.